Thursday, August 4, 2016

கோழி பண்ணை அமைப்பவர்கள் நோய் தடுப்பை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்


இதை படிபவர்கள் பரப்புங்கள் "share" செய்யுங்கள்..
ரத்த கழிச்சல் நோய்க்கு மருந்து ..
AMPROLIUM 'மருத்துவர் ஆலோசனை படி கொடுக்கவும்'
வெள்ளை கழிச்சல் மருந்து ..
("lasota and rdvk injuction")
மூலிகை மருத்துவம் வெள்ளை கழிச்சல் :
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.

Tuesday, August 2, 2016

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள் :

கட்டுரை ஒன்று :
நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள் :
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும்வளரக்கூடியது.
சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாகதேவைப்படும் ருசியான முட்டைகள் 
குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில்.
அவசர பணத்தேவையை பூர்த்திசெய்யும் தொழில்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில்.
கிராமப்புறபெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை.
குஞ்சுகளைபாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது.
அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்திதிறன் குறைந்து காணப்படுகிறது.
எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய்தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்தோமானால்
நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமானதொழிலாக வளர்சியடயும்.
‪#‎TkpFarms‬
‪#‎Iniyan‬
websie :www.nattukozhifarms.in
fb page :www.facebook.com/tk.pannai
Contact : 9566327789
youtuce channel : https://www.youtube.com/channel/UCfsOgjf9N-Q3RWHP3nWDcMA

Wednesday, April 6, 2016

நாட்டுகோழிகளின் நல மேலாண்மை

நாட்டுகோழிகளின் நல மேலாண்மை


நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசிஅவசியம் போட வேண்டும்